கடமையைச் செய் என்பது தான் என் பாலிஸி!

– அன்றே பேசிய ரஜினி!

ஆனந்த விகடனில் (03.07.2005 தேதியிட்ட இதழ்) வெளிவந்த ரஜினியின் கேள்வி-பதில்.

வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க… எங்கேயோ எதிர்பார்க்காத இடத்தில் காயப்பட்டு இருப்பீங்க…

அவமானங்களைக்கூட சந்திக்க வேண்டி இருந்திருக்கும்… சில சமயம் எதிர்பார்க்காத தோல்விகள்… ஆனால், இது அத்தனையையும் தாண்டி நீங்க உங்களைக் காப்பாத்திக்கிட்டது எப்படி?

டியூட்டி! செய்யற வேலையில் நமக்கு இருக்குற கன்விக்‌ஷன்தான் எப்பவுமே நம்மைக் காப்பாத்தும். ஒரு சகோதரனா, ஒரு நண்பனா, நடிகனா, மகனா, அப்பனா, குடும்பத் தலைவனா நாம என்ன ரோல் எடுக்கிறோமோ, அதைக் கவனமா முழு மனசோட செய்துடணும்.

வாழ்க்கை ஒலிம்பிக்ஸ் மாதிரி… கிரவுண்ட்ல போய் நின்னுட்டோம்னா, எடுத்துக்கிட்ட வேலையைச் சரியா செஞ்சு, சரியா ஓடிப்போய் எல்லையைத் தொட்டுறணும். ‘கடமையைச் செய்!’ என்பதுதான் என் பாலிசி! நிச்சயம் பலன், தானே பின்னால் வரும்.

ஏன், நான் சினிமா பண்றப்பக்கூட அப்படித்தான். சமயத்தில் அம்பது, அறுபது சதவீதம் படம் நடக்கும்போதே, அது ஓடுமா, ஓடாதானு தெளிவா தெரிஞ்சுடும். ரெடியான வரையில் அந்தப் படம் நமக்கு புடிக்கலைன்னே வெச்சுக்குங்க..

அதுக்காக அதை விட்டுட்டு விலகிட மாட்டேன். என் ஆர்வத்தையும் குறைச்சுக்க மாட்டேன். அது கமிட்மெண்ட். அங்கே நாலுபேர் நம்மை நம்பி இருப்பாங்க.. அதனால அந்த வேலையை சின்ஸியரா முடிச்சுக் கொடுத்துருவேன். அப்படித்தான் இருந்திருக்கேன்… இருப்பேன். அந்த உறுதி மனசில் இருந்ததுன்னா ஒவ்வொண்ணா ஜெயிச்சிடலாம்!

வாழ்க்கை உங்களுக்குக் கத்துக் கொடுத்த விஷயம் என்ன?

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்… வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது… இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்… எதையும் ஜஸ்ட் லைக் தட் தாண்டிப் போயிடலாம்!

நன்றி: ஆனந்த விகடன்

Comments (0)
Add Comment