எந்தப் பெயரைக் கொண்டு தன்னை இழிவுபடுத்தினார்களோ, அந்தப் பெயரை அடையாளமாக வைத்து அந்தப் பெயரை உலகமே புகழும்படியாக செய்தவர் ‘பீலே’.
உலக கால்பந்தாட்டத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்ட முறை தான் சரியென பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தனக்கு தெரிந்த பழம்பெருமை வாய்ந்த ‘ஜிங்கா’ கால்பந்தாட்ட முறையை உலகப்புகழ்பெறச் செய்தது மட்டுமல்லாமல், தன் தனித்திறன் மூலம் 1958, 1962, 1968 என மூன்று உலகக் கோப்பைகளை பிரேசில் பெற முக்கிய காரணமானவர் பீலே.
உலக வரலாற்றிலேயே 16 வயதில் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 17 வயதில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று அவர் வெற்றிபெற்ற சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படவில்லை.
‘தலையில் அடித்து அதிக கோல் அடித்தல்’, ‘அதிக ஹாட்ரிக் கோல்’, ‘அதிக உலகக் கோப்பைகளை வென்ற வீரர்’ உள்ளிட்ட பல உலக சாதனைகளுக்கும், கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரரான கால்பந்தாட்ட ஜாம்பவான் ‘பீலே’ தன் 82ம் வயதில் நேற்று காலமானார்.
‘பீலே’ அவர்களின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது, நாம் மற்றவர்களால் எப்படி இழிவுபடுத்தப்பட்டாலும், சோர்ந்து போகாமால் தன் சாதனையின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே.
அறிவுரை என்பதை ஏட்டுச் சுரக்காய் என்னும் நிலையிலிருந்து தன் விடாமுயற்சியின் மூலம், பீலே போன்றவர்கள் தான் அதை நடைமுறைபடுத்தி நம்பிக்கைக்கான உதாரண நாயகர்களாக திகழ்கிறார்கள்.
நம்மை விட்டு மறைந்தாலும், வரலாற்றில் கால்பந்தாட்டம் உள்ளவரை ‘பீலே’ புகழோடு வாழ்வார்.
– நன்றி: வேந்தன் முகநூல் பதிவு