தி கிரேட் இந்தியன் கிச்சன்: 29-ல் ரிலீஸ்!

இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் ஜியோ பேபி டைரக்‌ஷனில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்தார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.

ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனாவும் இப்போதே வெளியாவதால், கிச்சன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளார்கள்.

Comments (0)
Add Comment