வாழ்வின் இன்னொரு முக்கிய தருணம் இது என்கிறார் செல்வமுரளி.
“கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்களை சந்தித்து விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தில் என்ன தேவை என்று உரையாடினேன் முழுதும் தமிழில்” என்று பதிவிட்டுள்ளார் மென்பொருள் பொறியாளர் செல்வமுரளி.
இதுபற்றி எழுதியுள்ள ஆழி செந்தில்நாதன்.
“இந்தப் புகைப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். நான் செல்வ முரளியைப் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். 2006 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய மொழிபெயர்ப்பு பயிற்சிப்பட்டறையில் வந்து கலந்துகொண்டவர்.
தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்து தொழில்செய்தவர், கணித்தமிழ் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டவர்.
வாழ்வில் எத்தனையோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டவர் இவர். அதில் எனக்கு தம்பிதான் இவர்! சுந்தர் பிச்சையைச் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பதல்ல இவரது முயற்சியின் வெற்றி.
சுந்தர் பிச்சை தலைமை தாங்கும் கூகிள் நிறுவனத்தின் ஒரு செயல்பாட்டோடு இணைந்து.
அதற்கான தகுதியைப் பெற்று, செல்ல வேண்டிய இடங்களுக்குச் சென்று, இப்போது அந்த நிறுவனத்தின் சிஇஓவோடு தனியே உரையாடியிருக்கிறார். அதுதான் பெரிய வளர்ச்சி. வாழ்த்துகள் முரளி. நீங்கள் பெரிய ஆளாக நிச்சயம் வளர்வீர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.