“தந்தை பெரியாரின் 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழா. (செப்டம்பர் 17, 1973)
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். தன் கட்சியின் முக்கியமான தோழர்களுடன் பெரியார் திடலுக்கு வந்தார். பெரியாருக்கு மாலை அணிவித்து, வாழ்த்துக் கூறி, ஒரு கவரில் 5,000 ரூபாய் வைத்துக் கொடுத்தார்.
சிறிதுநேரம் நலம் விசாரித்ததோடு, அடுத்த பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெரியாரும் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “உங்கள் அன்பு அபரிமிதமானது” என்று கூறினார்.
பின்னர் எம்.ஜி.ஆர் விடைபெற்றுச் சென்றார்.”
– ‘விகடன் மேடை’ வாசகர் கேள்வி பகுதியில் தி.க.பொதுச் செயலாளர் கி.வீரமணி