இன்னும் வலுவடையும் இந்தியக் கடற்படை!

உள்நாட்டிலேயே 6 ஸ்கார்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் புராஜக்ட்-75 என்ற திட்டத்தை பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் சோ்ந்து ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 5-ஆவது ஸ்கார்பீன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாகீரின் தயாரிப்புப் பணி 2020 நவம்பா் 12-ஆம் தேதி தொடக்கியது.

பணிகள் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஆயுதம் உள்ளிட்ட ஆழ்கடல் சார்ந்த முக்கிய சென்சார் சோதனைகளை வாகீா் நிறைவு செய்தது.

இந்த நிலையில், வாகீா் நீா்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த நீா்மூழ்கி கப்பல் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.

Comments (0)
Add Comment