மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கிய கொரோனா!

– மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன்

சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், “கொரோனா ரத்த மாதிரிகளை தினசரி மரபணு ஆய்வகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம்,  நாட்டில் புழக்கத்தில் இருக்கும் புதிய மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

புதிய சார்க் வகை கொரோனா தொற்றைக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பது மிகவும் முக்கியமானது.

இந்தச் சூழலில், அனைத்து மாநிலங்களும் நேர்மறை வழக்குகளின் மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று ராஜேஷ் பூஷன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment