மக்களவையில் தயாநிதி மாறன் ஆதங்கம்
மக்களவையில் பேசிய தி.மு.கவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து எனக் கூறினார்.
யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து அவைகள் வாழ்வதற்கேற்ற சுற்றுச்சூழல் அமைப்பு சீரழிந்து வரும் நிலையில், அதனை ஈடு செய்ய நாம் என்ன செய்யப் போகிறோம்? என்றும்,
நாடெங்கிலும் மனிதர்கள் மற்றும் வேட்டைக்காரர்களின் சுயநலத்தினாலும், ரயில் விபத்துக்களாலும், யானையின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பாலும் யானைகள் உயிரிழப்பு தொடர்ந்து நடக்கிறது என்றும் தயாநிதிமாறன் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக தமிழ்நாட்டில், முதலில் சட்டவிரோதமாக யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்தும், பிறகு ஒன்றிய அரசின் உதவியோடு அதனை சட்டப்பூர்வமாக மாற்றி, அங்கே இப்போது அதிக ஒலியுடன் கூடிய இசையும் ஒலிக்கப்படுகிறது என்றும்,
யானைகள் கூட்டமாக ரயில் பாதையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி பல யானைகள் பலியாகின்றன எனவும் கூறிய அவர், யானைகள் பாதையை கடக்கும் இடங்களில் அவைகள் பாதிக்காத வகையில் உயர்மட்ட இரயில் பாதைகள் அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.