வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!

– தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம்

”உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு.

இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம், லஞ்சம், ஒழுக்கக்கேடு எல்லாம் வளரத் தொடங்கிவிட்டன.
இங்கே எப்படி வாழ்வது? எதற்காக வாழ்வது?

இப்போது நான் உயிரோடு மட்டுமே இருக்கிறேன். வாழ்வதாகச் சொல்ல முடியவில்லை.

வாழ்வது வேறு, உயிரோடு இருப்பது வேறு”

– மொழிப் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குப் பலமுறை சென்று மறைந்த தமிழறிஞரான கி.ஆ.பெ.விசுவநாதம் தன்னுடைய 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி.

Comments (0)
Add Comment