நூல் விமர்சனம்:
சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும்.
அந்த அனுபவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையே வேண்டாம் என்று தலைதெரிக்க ஓடிப்போனவர்கள் பலர்.
தன்னை நாடி வருபவர்களுக்கு, தன்னைத் தகவமைத்துக்கொள்கிற தைரியமும் நம்பிக்கையும் இருக்கிறதா என்று சென்னை மாநகரம் வைக்கிற தகுதித்தேர்வுதான் முதல்நாள் இரவுப்பொழுதைக் கழிக்கிற அனுபவம்.
சென்னைக்கு வருபவர்கள், முதல்நாள் இரவுப்பொழுதைக் கழிக்கும் இடமே இங்கு அவர்களுக்கான முதல் முகவரி. அங்குதான் அவர்களின் வெற்றிக்கான விதை விதைக்கப்பட்டது.
அவர்களின் விரலைப் பிடித்துக்கொண்டு அந்த முகவரியில் இருந்து நகர்ந்து கடந்த காலங்களில் பயணித்து நிகழ்காலம் வந்து மீள்கின்றன இந்தக் கட்டுரைகள். 25 சாதனையாளர்களும் மனம் திறந்து தங்கள் ஏற்ற இறக்கங்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்கள்.
****
முதல் முகவரி.
வெளியீடு: சந்தியா பதிப்பகம்,
77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை -83
044-24896979, 9841191397
விலை ரூ. 160/-