‘பபாசி’க்கு பத்திரிகையாளரின் கோரிக்கை!

46-வது ஆண்டாக நடைபெற இருக்கும் இந்த கண்காட்சிக்கு, சர்வதேச புத்தகக் கண்காட்சியாக நிகழ உள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ரூபாவதி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“புத்தகக் கண்காட்சி நிகழ்வுகள் நடக்கும் எல்லா நாட்களிலும், பத்திரிகை, தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியா என எல்லா வகையில் கவரேஜ் செய்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடவும், தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளதற்கு ஊடகங்களின் பங்கும் உள்ளதாக நினைக்கிறேன்.

ஆனால், ஊடகர்களுக்கு கண்காட்சி அரங்கில், ஏதாவது சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதா? என்றால் இல்லை.

ஊடகர்கள் சந்திக்க, பேட்டிகள் எடுக்க, சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய, பொருட்களை வைத்து விட்டுச் செல்ல என ஏதாவது ஒரு ஏற்பாடு இதுவரை இருந்ததிலை.

சில நேரங்களில் தொலைக்காட்சி பதிவுகளுக்கு கண்காட்சிக்கு உள்ளே செல்வதால், அரங்குகளில் நெரிசல் மிகுந்து, வாசகர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

ஆகவே, சர்வதேச புத்தகக் கண்காட்சியாக நடைபெற உள்ள வரும் ஆண்டில், PRESS ROOM என ஏதாவது ஒரு ஏற்பாடு இருந்தால், அதை பயன்படுத்திக் கொள்வோம்.

மருத்துவம், தீயணைப்பு, காவல்துறை என இதர துறைகளைப் போல ஊடகர்களையும் பொருட்படுத்துவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்” என்று ரூபாவதி தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment