இந்த வரிசையில் என் பெயருமா?

-நடிகர் பார்த்திபன் ஆச்சரியம்

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், ஒரு கவிதை நூலில் தன் பெயரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு எழுதியுள்ளார்.

“முதல்வர் நடைபயிற்சி செய்யும் பூங்காவில் நான் நடந்துக் கொண்டிருக்க, எதிரில் வந்த நபர் என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு, கண்கள் தழுதழுக்க, கைகள் நடுங்க, கூப்பிய கைகளோடு குனிந்து காலைத்தொடப் போக, தடுத்த நான் ”sorry அதெல்லாம் பண்ணாதீங்க, யார் நீங்க? என்னன்னு சொல்லுங்க” என்றேன்.

”நான் ஒரு I T person, உங்களுக்கு dedicate பண்ணி இந்த book எழுதியிருக்கேன், எதிர்பாராம நீங்களே எதிர்ல…” நம்ப முடியாமல் நீட்டிய புத்தகத்தை வாங்கி (வாக்கிங் பாதையில் எப்படி ஒரு dedication திடீரென முளைக்க முடியும்?) பார்த்தேன்.

அதில் புகைப்படமாய்! ஆச்சர்யமாய் தான் இருந்தது. அவர் பெயர் மனோஜ் சேகர்! இந்த வரிசையில் என் பெயருமா? சிந்திக்கவேண்டும் இன்னும்!” என்று ஆச்சரியம் மாறாமல் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Comments (0)
Add Comment