அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக சத்யராஜ்!

ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.

கதாநாயகனாக ஸ்ரீபதி. அவரே படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர்.

சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

மோகன் டச்சு என்பவர் படத்தை இயக்குகிறார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.

டெரர் போலீஸ் அதிகாரி வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

மலையாள நடிகை நியா, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் அதிகமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் வசனங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Comments (0)
Add Comment