மருத்துவப் படிப்பில் தமிழகம் முதலிடம்!

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 2.5 கோடியில் புனரமைக்கப்பட்ட கட்டிடம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில்பாலாஜி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் படித்து வந்த நிலையில்,

கடந்த ஆண்டு மாணவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி தற்போது 200 மாணவர்கள் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர்” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment