நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து நிற்கும் உழைப்பு!

மதுரைக்குச் செல்கிற யாரும் வைகை ஆற்றைக் கடப்பதற்கு அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை மறந்துவிட முடியாது.

ஆல்பர்ட் விக்டர் பாலம் என்று அழைக்கப்படும் அந்தப் பாலம் திறக்கப்பட்டது 1889-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி.

மதுரை மேம்பாலம் என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்படும் பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டாலும், அதன் கட்டுமானம் பல புயல், வெள்ளங்களைத் தாண்டி, கால மாற்றத்தைத் தாண்டி இப்போதும் வலுவாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

132 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஊழலும், கமிஷனும் குறுக்கே வராத காலத்தில் கட்டப்பட்ட சிரத்தையும், நேர்த்தியும் இப்போதும் உருக்குலையாமல் இருக்கின்றன..

அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் கட்டப்பட்ட பல பாலங்கள் கட்டுமானத் திறனில்லாமல் மிகக் குறுகிய காலத்தில் சீர்குலைவைச் சந்திக்கிற நிலையில், ஆங்கிலேய ஆட்சி அகன்று பல ஆண்டுகள் ஆனாலும், அந்தக் காலத்திய உழைப்பு வலுவாக நின்று கொண்டிருக்கிறது.

காலத்தை மீறிச் சிலருடைய உழைப்புகளே சாட்சியமாய் நிற்கின்றன.

இந்தப் படத்தில் காட்சி அளிப்பது 1915-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்!

நன்றி: மதுரை கார்த்திகேயன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment