தஞ்சையும் நானும் – நர்த்தகி நடராஜ்!

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் மார்ஷ் ஹால் யூனியன் கிளப் மாடியில் தமிழக திட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் ஆடற்கலையரசி நர்த்தகி நட்ராஜ் “தஞ்சையும் நானும்!” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

இதுபற்றி சமூகவலைத்தளத்தில் எழுதியுள்ள கவிஞர் வெற்றிப் பேரொளி,

“முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்தவள் நான்.

இங்கு தேடி வந்தபோது தன்னை ஏற்றுக் கொண்டு, வீட்டிலேயே தங்க வைத்து, நடனம் சொல்லித் தந்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தன்னை உதவிப் பேராசியராக இணைத்துக்கொண்ட தஞ்சை மேலவீதியில் வசித்த தன் நாட்டியக் குருநாதர் கிட்டப்பா பிள்ளை பற்றிய நினைவுகளை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சித் தந்தை மாண்பமை சண். இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு தஞ்சையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பெருமிதத்துடன் எடுத்துரைத்தார். 

யூனியன் கிளப் அரங்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்,

நாட்டியக் கலையை வடிவமைத்த “தஞ்சை நால்வர்” நினைவகம் அமைத்தல் போன்ற பல கோரிக்கைகள் வைக்கப்பட, அனைத்தையும் முறைப்படி, விதிப்படி செய்து தருவதாக தஞ்சை மாநகரத் தந்தை உறுதியளித்தார்.

மு‌ன்னதாக நானும் நர்த்தகி நட்ராஜ் கடந்து வந்த துயரப் பாதைகளையும், அடைந்திருக்கும் வெற்றிகளையும் எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கினேன்.

திண்ணையிருந்த வீடு நூலாசிரியர் சசி எம். குமார், இதழாளர் கவிஞர் ரவிராஜ், ஒளிப்படக் கலைஞர் பிம்பம் சாகுல் ஆகியோர் நிகழ்வை ஒழுங்குபடுத்த, கவிஞர் வல்லம் தாஜ்பால் நிகழ்வை அழகாக ஒருங்கிணைத்தார்” என்று எழுதியுள்ளார்.

Comments (0)
Add Comment