இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி.
உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்டுக்கு மாற்றுவதன் மூலம் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும்.
டிஜிட்டல் ரூபாயை செயல்படுத்தக் கூடிய வங்கிகளின் மொபைல் செயலிகள் மூலம், இ-வேலட் முறையில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ரூபாயை சேமித்து பரிவர்த்தனை செய்யலாம்.
இதனை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால், ஒரு பொருளையோ, சேவையையோ டிஜிட்டல் ரூபாய் செலுத்திப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.