தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளைச் சந்தித்தார் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்.
சென்னைக்கு வந்த அவர், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கணேஷ் இல்லத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டு பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது, சமகால விளையாட்டுத் துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். விரைவில் அனைத்து வேண்டுகோள்களையும் ஆலோசனை செய்து நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.