தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டன்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர்.
இதற்காக 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஆண்கள் 2 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேரும், பெண்கள் 66 ஆயிரத்து 811 பேரும் 59 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவர்களுக்கு முதல் கட்டமாக நேற்று தமிழகம் முழுவதும் 295 இடங்களில் எழுத்து தேர்வு நடந்தது. சென்னையில் 16 மையங்களில் தேர்வு நடைபெற்றது. நேற்று நடந்த எழுத்து தேர்வில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். அதாவது 82 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்துள்ளது.