10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை!

– போக்குவரத்துக் கழகம் 

அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாநகர பேருந்துகளில் பயணசீட்டுக்காக மக்கள் வழங்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணசீட்டு வழங்க வேண்டும் என  நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் ஆணையிட்டுள்ளது.

Comments (0)
Add Comment