விரைவில் புது சிம்பொனி!

இசைஞானி இளையராஜாவின் விளக்கம்!

சிம்பொனி பற்றிய தேடலும் புரிதலும் மெல்ல மெல்ல ரசிகர்களை வந்தடைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்.

கடந்த சில தசாப்தங்களாகவே இதை ரசிகர்கள் நிறையவே தேடத் தொடங்கி இருக்கின்றனர். அதற்கு இணையம் கைகொடுத்திருக்கிறது.

என்றாலும் இன்னும் ஒரு சிறு அவகாசம் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அதன் பிறகு நிச்சயமாக அந்தப் படைப்பைக் கொடுப்பேன். 

அத்தோடு நின்றுவிடாமல் அடுத்தடுத்து அவர்களுக்கும், உலகத்துக்கும் என பல சிம்பொனிகளை உருவாக்க விழைகிறேன்.

தற்போது திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பணி ஒருபக்கம் நடந்துகொண்டே இருக்கிறது.

இன்னொரு பக்கம் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் எனது புதிய சிம்பொனியை எழுதி வருகிறேன். 

அது முழுமையடைந்ததும், பெயர் பெற்ற, மிகப்பெரிய சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து அதை இசைக்க வேண்டும் என எண்ணியிருக்கிறேன்.

தற்போது சிம்பொனியின் ‘ஃபர்ஸ்ட் மூவ்மெண்ட்’டை எழுதி முடித்துவிட்டேன்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் அடுத்த 3 மூவ்மெண்டுகளையும் எழுதி முடித்து விடுவேன்.

நன்றி: இந்து தமிழ்த்திரை, ஆர். ஷபிமுன்னா எடுத்த பேட்டில் இருந்து.

Comments (0)
Add Comment