– சென்னை உயா்நீதிமன்றம் வேதனை
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவக்குறிச்சி கிராமத்தில் மயான வசதி இல்லாத சூழலில் அதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது.
அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஜாதிய கட்டமைப்பை நம்மால் உடைக்க முடியவில்லை. ஜாதியின் அடிப்படையிலேயே தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு அரசுகளும் தள்ளப்பட்டுள்ளன.
மனிதன் தன்னுடைய இறுதிக் காலத்திலாவது சமத்துவத்தை காணும் நிலை உருவாக வேண்டும். ஜாதிகள் இல்லை என்பதை பாரதியார் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ள நிலையில், 21-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு ஜாதிய கட்டுமானங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதா்களை அடக்கம் செய்யும் தருணங்களில்கூட ஜாதிய வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்தச் சூழலில் அனைத்து சமுதாயத்தினருக்குமான பொது மயானங்களை ஏற்படுத்தும் அரசின் திட்டம் வரவேற்புக்குரியதாகும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.