தமிழகத்தில் பயிர்க் காப்பீடு செய்தோர் 9 லட்சம் பேர்!

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுக்கானக் கடைசி தேதியை நவம்பர் 21 வரை நீட்டிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில், நவம்பர் 21ம் தேதி வரை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட வேளாண்மை உழவர் நலத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில், நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரில் இதுவரை 23.83 இலட்சம் ஏக்கர் பரப்பளவுக் காப்பீடு செய்யப்பட்டு,  சுமார் 10.94 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவான நவம்பர் 15 ஆம் வரை சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரில் பொது சேவை மையங்கள் மூலம் 18.04 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 8.51 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment