மொழிபெயர்ப்பாளருக்கு அமெரிக்கா நிதியுதவி!

தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பிரியம்வதா ராம்குமாருக்கு உலகின் சிறந்த பென் அமெரிக்கா நிதியுதவி கிடைத்திருக்கிறது.

இதற்கு பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

“மிக அருமையான செய்தி ஒன்று கிடைத்திருக்கிறது. Pen America வழங்கும் வருடாந்திர இலக்கிய ஆதரவு இம்முறை ஒரு தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு கிடைத்திருக்கிறது.

2023ம் ஆண்டுக்கான இந்த நிதியுதவி பிரியம்வதா ராம்குமார் எனபவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது வரவேற்கவேண்டிய விசயம்.

அவர் ஜெயமோகனுடைய வெள்ளை யானை நாவலை மொழிபெயர்க்கிறார். Pen America வின் நிதியுதவியை மொழிபெயர்ப்புக்கு பெறும் முதல் தென்னிந்தியர் பிரியம்வதா என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்” என்று முத்துலிங்கம் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Comments (0)
Add Comment