– வ.உ.சிதம்பரம்
ராஜதுரோகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால் பிரிட்டிஷார் காலத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா?
1906-ல் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையில் கப்பலை ஓட்டிய வ.உ.சிதம்பரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டார். அப்போது பாரதி எழுதினார் ‘இது வினோதக் கூத்து’.
முதலில் பாளையங்கோட்டைச் சிறை.
அடுத்து கோவைச் சிறை. அதற்குள் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டக் கைதிகளுக்கு அவ்வளவு கொடுமைகள். எதிர்த்துச் சிறையில் கலவரமே நடந்தது.
அப்போது நடந்த விசாரணையின் போது நொந்து போய்ச் சொன்னார் வ.உ.சி.
“சிறையில் கைதிகளைப் படுமோசமாக நடத்துகிறார்கள். மனிதக் கழிவைக் கூடச் சாப்பிடச் சொல்கிறார்கள். சாப்பிடும் உணவில் கற்கள் எல்லாம் கிடக்கின்றன”
அதையடுத்து சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தன இந்த வரிகள்.
“என்னை அந்தமான் தீவுக்கே அனுப்பிவிடுங்கள்”
பல போராட்டங்களையும், பல சிறைச்சாலைகளையும் கண்ட அவருடைய நினைவு தினம் இன்று.