தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள்.
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
அவ்வகையில் 2022-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அல்லது சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலோ விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.