68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது.
இதில், 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிர்மோர் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில் 55.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஹிமாசலில் நவம்பர் 12-ம் தேதி காலை 8 மணி முதல் டிசம்பர் 5-ம் தேதி மாலை 5.30 மணி வரை வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.