குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!

– தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த ’தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை’ கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

முதலமைச்சர், குழந்தைகளின் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு குழந்தைகளுக்கெனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். இளம் சிறார்கள் அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்” என வாழ்த்து கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment