பாஜக ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினர்!

– ராகுல்காந்தி கடும் விமர்சனம்

இந்திய ஒற்றுமை பாதயாத்திரையைத் தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 65-வது நாளாக மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தார்.

அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன் ராகுல்காந்தி உரையாடினார்.

அந்த மக்களிடையே பேசிய அவர், ”சிறுபான்மை சமூக மக்கள் தனியாக இல்லை. தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் அவர்களுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்.

அதோடு, இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் அதிக அளவில் தாக்கப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

முன் எப்போதும் இல்லாத வகையில் நீதித்துறையும், அரசியலமைப்புச் சட்டமும் இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி இல்லை” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment