‘பொன்னியில் செல்வன்’ படத்தின் நிகர லாபம் ரூ.140 கோடி!

தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மொத்தமாக 240 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு 10 கோடி, வந்தியதேவனாக நடித்த கார்த்திக்கு 8 கோடி, அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடி, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக நடித்ததற்கு 8 கோடியும் ஊதியமாக கொடுக்கப்பட்டது.

குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு 1.5 கோடி சம்பளமும், பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமானுக்கு 4 கோடி சம்பளமும் கொடுத்திருக்கிறார்கள்.

இதர நடிகர், நடிகைகளுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தமாக 49.50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் 95 கோடி வசூல் செய்திருந்தது. ஆந்திராவில் 11 கோடி, கேரளாவில் 5.5 கோடி, கர்நாடகாவில் 3.5 கோடி மற்றும் ஹிந்தியில் 13 கோடி வசூல் செய்திருந்தது.

அனைத்து மொழிகளிலும் பொன்னியின் செல்வன் ரூ. 429. 75 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் வசூல் 240 கோடியில் 60 கோடியை மணிரத்னம் இயக்குநராக இருந்ததற்காக சம்பளமாக பெற்றுள்ளார்.

படத்தின் லாபத்தில் ஒரு கோடியில் 30 சதவீதம் ஷேர் வைத்துக் கொண்டாலே 60 கோடி மணிரத்னத்திற்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தளபதி விஜயை விட மணிரத்னம் படத்திற்கு அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் லைக்கா நிறுவனத்திற்கு 140 கோடி லாபம் கிடைத்திருக்கிறது.

Comments (0)
Add Comment