3 வயதுக்குள் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தூத்துக்குடி சிறுமி!

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பவதாரணி தம்பதிகளின் இரண்டரை வயது பெண் குழந்தை தியாஷிகாவுக்கு, அவரது பெற்றோர், கடந்த இரண்டு மாதங்களாக உலக நாடுகளின் கொடிகளை நாட்டின் பெயருடன் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து எளிதாக பல்வேறு நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டிய தியாஷிகாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அவரது பெற்றோர், தியாஷிகாவின் திறமையை வெளியுலகிற்கு தெரியப்படுத்த விரும்பினர்.

இதைத்தொடர்ந்து தியாசிகா 195 உலக நாடுகளின் கொடிகள் மற்றும் 75 போக்குவரத்து சிக்னல்களை அடையாளம் காண்பித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தச் சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் கலாம் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அங்கீகரித்துள்ளது.

இரண்டரை வயதில் சாதனை படைத்த இந்த சாதனை சிறுமியின் திறமையை  ஏராளமான பாராட்டி வருகின்றனர்.

Comments (0)
Add Comment