கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (நவம்பர் 6) தமிழகத்தில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
அதேநேரத்தில் இது தொடர்பான வழக்கில் நேற்றைய தீர்ப்பில், பேரணியை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குளோ நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதால் நாளை (நவம்பர் 6) நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 97 ஆண்டுகளாக தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம் என்றும் சட்ட ரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடக்கவிருந்த ஊர்வலத்தை நடத்த இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.