தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்!

தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு  அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும் தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அதனால் தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையில் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதோடு, பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100-க்கு, வருமானமாக ரூ.325 தமிழகத்திற்கு கிடைக்கும்.

அதோடு, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதை முன்னிட்டு அதுவரை சென்னை மெட்ரோ வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படும்” என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Comments (0)
Add Comment