குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
இரண்டு நாள் பயணமாக மிஸோரம் மாநிலத்திற்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்கள், விளையாட்டு, கலாசாரம் மற்றும் தொழில்துறைகளில் தங்கள் திறமைகளை நிலைநாட்டி அதிகாரமிக்கவா்களாக பலம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பொது வாழ்வில் குறிப்பாக நாடாளுமன்றம், பேரவைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பெண்களின் வளர்ச்சி நம் தேசத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள் சா்வதேச சமூகத்தைக் கவா்ந்துள்ளது.
இந்தப் பூமியை பாதுகாக்கும் பணிகளில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.