புதிய பொலிவில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல்!

நூல் அறிமுகம்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்: 1 திரைப்படம் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஏற்கெனவே படித்தவர்களும் மீண்டும் படிக்கிறார்கள். படிக்காதவர்களும் பெரும் ஆர்வத்துடன் படிக்க வந்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் பொன்னியின் செல்வன்தான் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

எப்போதும் நாட்டுடமையாக்கப்பட்ட அந்த நூல்தான் முன்னணியில் இருந்து வருகிறது. பல பதிப்பகங்களும் புதிய வடிவமைப்பில் அழகுடன் அதை பதிப்பிக்கத் தொடங்கியுள்ளன.

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகமும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் ஒரே நூலாக வெளியிட்டுள்ளது.

இதுபற்றிப் பேசிய பதிப்பாளர் வேடியப்பன், “கடந்த 3 ஆண்டுகளாக திட்டமிட்ட, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களும் ஒரே நூலாக தற்போது வெளியாகியுள்ளது.

உண்மையில் மிகவும் சிறப்பாக எடுத்துப் படிக்க வசதியாக, வாசிக்க சலிக்காத எழுத்துரு மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் அற்புதமான 16 பக்க முன்னுரையுடன் வெளியாகியுள்ளது.

கெட்டி அட்டை. முன் அட்டையைத் திறந்தவுடன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதா பாத்திரங்களின் விளக்கக் குறிப்புகளும், பின் அட்டையின் உள்ளே கல்கியின் ஓவியம் மற்றும் கு.ஞானசம்பந்தனின் முக்கியமான சில வரிகள்,

நெதர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழனின் செப்பேடுகள் பற்றிய படத்துடன் கூடிய குறிப்புகள் என முடிந்தளவு வாசகர்களுக்கு சற்றே புதிய அனுபவமாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று விவரிக்கிறார்.

பொன்னியின் செல்வன்: கல்கி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
மேற்கு கே கே நகர்,
சென்னை- 78

விலை ரூ.1200.
சலுகை விலை ரூ.999
வாட்ஸ்அப் எண் : 9940446650

Comments (0)
Add Comment