‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிக்கும் காமெடி படம்!

விக்ரம் வேதா, காலா, சில்லுக் கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல்முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்குகியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மணிகண்டனுடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ். பி. சக்திவேல் பணிபுரிந்துள்ளார்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்திமுடித்திருக்கின்றனர்.

Comments (0)
Add Comment