காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீஸருக்கு வரவேற்பு!

கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகிஇருக்கிறது.

கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர்களையும் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இறுதியில் நடிகர் யோகிபாபுவுக்கும் படத்தில் வரும் குழந்தைக்கும் இடையில் வரக்கூடிய வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்த வகையில் அமையும். திரையரங்குகளில்எப்போது வெளியாகும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.

கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லே, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சாமிநாதன், தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு அருணாச்சலம், லிவிங்ஸ்டன், சந்தான பாரதி, மதன் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Comments (0)
Add Comment