எனக்குள் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கியவர்!

முக்தா ஸ்ரீநிவாசனின் அனுபவப் பதிவு.

“எங்கள் கிராமத்தில் ஒரு சமயம் நடந்த நிகழ்ச்சி இது.

எங்கள் கிராமத்தில் நரசிம்ம ஐயங்கார் என்கிற ஒருவர் இருந்தார். மிகவும் படித்தவர், ஞானவான்.

எங்கள் கிராமத்து மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பாடத்தில் சந்தேகம் ஏற்படும் நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு பாடம் சொல்லித்தந்து அவர்களது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நல்ல மனிதர்.

நான் காலேஜில் சேராத காரணத்தினால் மனம் உடைந்துள்ளேன் என்பதை அறிந்து அவர் எனக்கு கூறிய அறிவுரையும் அதன் மகத்துவமும் மிக மிக உயர்ந்த ஒன்றாகும்.

”ஏண்டா.. அவங்கெல்லாம் காலேஜ் போய் படிக்கட்டுமே விட்டுத்தள்ளு.
அவங்களெல்லாம் அங்கே நாலு வருஷம் படிச்சு பி.ஏ. ஆவான்”

அவன் காலேஜ்ல படிச்ச நாலு வருஷத்துல வருஷத்துக்கு ஆறு புத்தகம்னு நாலு ஆறு இருபத்தினாலு புத்தகம் படிச்சிருப்பான்.

நீ ஒண்ணு செய். உனக்கு பணம் கிடைக்கும்போதெல்லாம் பொது அறிவை வளர்க்கக்கூடிய புத்தகம் ஒவ்வொன்றாக வாங்கிப்படி. அந்த புத்தகங்களை எல்லாம் கவனமா சேர்த்து வை. இப்போ என்ன ஆகும் தெரியுமா..?

காலேஜ்ல நாலு வருஷத்துக்கு இருபத்தினாலு புத்தகம் படிச்சவனை விட நீ தாண்டா அதிகமா படிச்சவனாகி விடுவாய்” என்று எனக்கு ஆறுதல் கூறி உத்வேகத்துடன் ஒரு புதிய பாதையினை எனக்குப் போட்டுக் கொடுத்தார்.

நானும் அவர் கூறியதையே பெரும் யோசனையாக ஏற்று பணம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் புத்தகங்கள் வாங்கிப் படித்து வந்தேன்.

இன்று எனது சொந்த லைப்ரரியில் மொத்தம் இருப்பது 4000 புத்தகங்கள்.

எனக்கு இப்போது காலேஜில் படிக்கவில்லையே என்ற குறை இல்லை“

***

– திரு. முக்தா வி.ஸ்ரீநிவாசன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment