இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் முதல் உரை
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை தந்த ரிஷி சுனக், நாட்டு மக்களுக்கு முதல்முறையாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “எனது தலைமையிலான இந்த அரசு அனைத்து நிலைகளிலும் நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல்படும்.
பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உறுதியை ஏற்படுத்துவதே இந்த அரசின் முதல் திட்டமாகும்.
சில கடினமான முடிவுகள் வரப்போகிறது. நான் வழிநடத்தும் இந்த அரசு, அடுத்த தலைமுறையினருக்கு கடனை விட்டுச் செல்லாது” என தெரிவித்தார்.