திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் 28-ம் தேதி அமல்!

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பழைய அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதுபோல் குறிப்பிட்ட விதிமீறல்களில் மீண்டும் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாவது முறையாக புதிய அபராதத் தொகை அட்டவணையின்படி கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் எனவும்,

உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இனி அதிக விழிப்புடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இதுவரை 23 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 12.5% குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே அபராதத் தொகை விதிக்கப்பட்டவர்கள் பழைய அபராதத் தொகைக்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது எனவும், புதிதாக விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கே தற்போது விதிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகை பொருந்தும் எனவும் அவர் கூறினார்.

Comments (0)
Add Comment