தூங்கி எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?

நாம் தூங்கி எழும்பியவுடன் ஏன் கைகளை நீட்டி சோம்பல் முறிக்கிறோம் தெரியுமா?

நாம் தூங்கும் போது, ​​நம் உடல் வெப்பநிலையும் சுவாச விகிதமும் குறைகிறது. மேலும் தசைகள் முடிந்தவரை ஓய்வெடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது.

நாம் தூங்கி எழும்பி சோம்பல் முறிக்கும் விதமாக கைகளை நீட்டும்போது, ​​தசைகள் உயிர்ப்படைகின்றன.

இதனால் இதய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நுண்குழாய்கள் விரிவடைகின்றன. அதோடு தசை ஏற்பிகளின் தூண்டுதல்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

எனவேதான் நாம் காலையில் எழும்பியவுடன் கை, கால்களை நீட்டி சோம்பல் முறிக்கிறோம்.

தகவல்: ஆர். மகேஷ்வரி, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவி.

Comments (0)
Add Comment