விலங்குகளுக்காக அதிக ஒலி தரும் பட்டாசுகள் வெடிக்காதீர்!

வனத்துறையினர் வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி, மாயார், சிங்கார, ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது.

இங்கு புலி, யானை, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளும் மற்றும் எண்ணற்ற உள்நாட்டு பறவைகளும் வாழ்கின்றன.

தற்போது உள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் குடிபெயர்ந்துள்ளன.

இந்நிலையில், ”தீபாவளியையொட்டி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளின் வெடி சத்தத்தால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும்,

இனப்பெருக்கத்திற்காக குடிபெயர்ந்துள்ள பறவைகள் பாதிக்கப்படும் என்பதாலும், இயற்கையை காக்கும் வகையில் தீபாவளி நாளன்று பட்டாசுகளை தவிர்த்து பசுமை தீபாவளியை கொண்டாட வேண்டும்” என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Comments (0)
Add Comment