தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளன. இதையொட்டி உத்திரப்பிரதேசம் டெல்லி பகுதிகளில் வசிக்கும் வெளியூர் நபர்கள், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனர்.
இதையொட்டி டெல்லி – குர்கான் இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் வரிசை கட்டி வந்த வாகனங்களால் சர்ஹாவுல் டோல்பிளாசா அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காற்று மாசால் திணறும் டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்துள்ளார்.
பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.