போதைப் பொருள் விளம்பரங்களில் நடித்தால் தண்டனை!

தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்தல் சட்டம்-2003-ஐ, தமிழகத்திற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்றும், இந்த திருத்தம் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் புகைக்குழல் கூடங்கள் எனப்படும் ஹுக்கா பார்கள் அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என்றும், எனவே புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும்,

அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. பிறகு இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Comments (0)
Add Comment