தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து சாமி சிலைகள் மற்றும் கலை அலங்காரப் பொருட்கள் என மொத்தம் 199 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் அருங்காட்சியகங்களில் 60-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பல சிலைகள் உள்ளன. அவற்றை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தல்களைத் தடுக்கும் விதமாக கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே செல்லும்போது ஒவ்வொரு சிலைக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தி அதன் நகர்வுகள் முழுமையாக கண்காணிக்கப்படும்” தெரிவித்தார்.