காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் கார்கே?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் வாக்குப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் வாக்களித்தனர்.

இந்தநிலையில், பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் இன்றே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1997 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் சீதாராம் கேசரி தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு 24 ஆண்டுகள் கழித்து நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக உள்ளதால், இந்தத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment