ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
பின்னர் 2022ம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியாவுக்கு வர உள்ளார்.
இந்தியா வரும் அந்தோனியோ குட்டரெஸ், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அந்தோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.