ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்துள்ள தடை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இரு நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, சுதான்ஷூ துலியா ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Comments (0)
Add Comment