கடவுளை வழிபடுவது தனிநபர் உரிமை!

கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதுரை மாவட்டம், திருமங்கலம், மேலநேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு வாலகுருநாதசுவாமி திருக்கோயில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதாகவும்,

தற்போது அந்தக் கோவில் திறக்கப்பட உள்ளதாக சிறப்பு அலுவலர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், ஆகவே அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறு காரணமாக கோவிலை மூடுவதன் மூலம் கடவுளை வணங்குவதை நிறுத்த முடியாது என்றும்,

கோவிலை திறப்பதற்காக சிறப்பு அலுவலர் பிறப்பித்த நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

அதோடு, கடவுளை வழிபடுவது என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என்றும், எனவே, இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்,

அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Comments (0)
Add Comment