அன்பும் இரக்கமும் வாழ்வின் அடிப்படை!

– வள்ளலாரின் அன்பு மொழிகள்!

உண்மையை மட்டும் பேசுங்கள், அது உங்கள் மேல் உள்ள மரியாதையைப் பாதுகாக்கும்.

குருவை வணங்கத் தயங்கி நிற்காதே!

சாதி.. மதம்.. இனம்.. மொழி.. என உயிர்களை வேறுபடுத்தக் கூடாது.

எல்லா உயிர்களும் நமக்கு உறவே.. அவற்றை துன்புறுத்தக் கூடாது. அன்பையும் இரக்கத்தையும் வாழ்க்கையின் அடிப்படையாக கருத வேண்டும்.

சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் ஆகியவற்றை அறவே
நீக்க வேண்டும்.

எதிலும் பொதுநலம் வேண்டும்.

மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களின் ஆசை.

உடலை வருத்தி விரதம் இருப்பதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே
சிறந்தது.

எல்லா செல்வங்களையும் கொடுத்த இறைவன் அதை அழிப்பதற்காகவே மனிதர்களுக்கு ஆணவத்தையும் கொடுத்தார்.

நட்புக்கு துரோகம் செய்யாதே.

பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும்
கடைமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

பொருள் காசு தேடுவதற்காக பொய் சொல்லாதே.

மனதை அடக்க நினைத்தால் அடங்காது.. அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான். இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

பசித்தவர்களுக்கு பாகுபாடின்றி உணவளிக்க வேண்டும்.

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது.
அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும். அது போல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும்.

வெயிலுக்கு ஒதுங்கும் மரத்தை வெட்டாதே.

மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட மன்னவர் எல்லோரும் மடிந்து மண்ணாகி விடுவதை நீ அறிவாய் இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு
அலைகின்றாய்..?

தானம் கொடுப்பதை எப்போதும் நிறுத்தாதே.

உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.

எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்து சம உரிமை வழங்குவோரின்
மனதில் இறைவன் வாழ்கிறான்.

தாய் தந்தை சொல்லை புறந்தள்ளாதே..!

எல்லா செயல்களிலும் பொது நலன் இருக்க வேண்டும். எல்லா பொருட்களும்
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.

பிராத்தனைகள் கூட தனக்கென்று இல்லாமல் எல்லோருக்குமாக செய்ய வேண்டும்.

நல்லவர்கள் மனதை கலங்கச் செய்யாதே.!

வாக்கு வேறு.. மனம் வேறு.. செயல் வேறு.. என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு
வயிறார உணவு கொடுங்கள். 

Comments (0)
Add Comment